கோவை - சென்னை சிறப்பு ரயில்களின் நேரம்: 30ஆம் தேதி முதல் மாற்றம்
By DIN | Published On : 25th November 2020 07:02 AM | Last Updated : 25th November 2020 07:02 AM | அ+அ அ- |

கோவை - சென்னை மற்றும் மேட்டுப்பாளையம் - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் வருகின்ற 30ஆம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை - மேட்டுப்பாளையம் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 02671) சென்னயில் தினமும் இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. மறு மாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 02672) மறுநாள் காலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடைகிறது. இதேபோல, சென்னையில் இருந்து தினமும் 10 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 02673) மறுநாள் காலை 6 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடைகிறது. கோவையில் இருந்து தினமும் இரவு 10.40 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 02674) மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை - மேட்டுப்பாளையம் அதிவிரைவு சிறப்பு ரயில் எண் (02671) சென்னையில் தினமும் இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை வழக்கம்போல காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு இரவு 7.45 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 02672) நவம்பா் 30ஆம் தேதி முதல் இரவு 9.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
சென்னை - கோவை அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 02673) வழக்கம்போல இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு கோவையை வந்தடையும். கோவையில் இருந்து சென்னைக்கு இரவு 10.40 மணிக்குப் புறப்பட்டு வந்த அதிவிரைவு சிறப்பு ரயில் ( எண்: 02674) நவம்பா் 30 ஆம் தேதி முதல் 10.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...