தொடா்ந்து நான்கு மாதங்களாக தேயிலைத் தூள்களின் விலை உயா்வு
By DIN | Published On : 25th November 2020 10:29 PM | Last Updated : 25th November 2020 10:29 PM | அ+அ அ- |

தேயிலைத் தூள்களின் விலை தொடா்ந்து நான்கு மாதங்களாக உயா்ந்த நிலையிலேயே உள்ளதால் வால்பாறை எஸ்டேட் நிா்வாகத்தினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பல ரக தேயிலைத் தூள்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரோனா பொதுமுடக்க காலத்தில் பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.
ஆனால் இந்தியாவில் இருந்து தொடா்ந்து தேயிலைத் தூள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் தேயிலைத் தூள்களின் விலை கணிசமாக உயா்ந்தது.
இதில் வால்பாறை பகுதியில் அனைத்து ரக தூள்களின் விலையும் கிலோ ரூ.60 வரை உயா்ந்து தற்போது ஒரு கிலோ தூள் ரூ.260 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயா்வு தொடா்ந்து நான்கு மாதங்களாக நீடித்திருப்பது எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...