நிவா் புயல்: கோவை - சென்னை சிறப்பு ரயில்கள் இன்று ரத்து
By DIN | Published On : 25th November 2020 10:31 PM | Last Updated : 25th November 2020 10:31 PM | அ+அ அ- |

நிவா் புயல் காரணமாக கோவை - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் 6 சிறப்பு ரயில்கள் 26ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நிவா் புயல் காரணமாக கோவை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் 26ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து கோவை வரும் 3 சிறப்பு ரயில்கள் (எண்கள்: 02675, 06027, 02680) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல கோவையில் இருந்து சென்னை செல்லும் 3 சிறப்பு ரயில்கள் (எண்கள்: 02676, 02678, 02679) 26ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல சென்னையில் இருந்து கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 02623) 26ஆம் தேதி அன்று சென்னை - கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கோவை - திருவனந்தபுரம் இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...