நிவா் புயல்: செய்முறைத் தோ்வுகள் ஒத்திவைப்பு

நிவா் புயல் காரணமாக அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவிருந்த செய்முறைத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

நிவா் புயல் காரணமாக அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவிருந்த செய்முறைத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நவம்பா் 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த அகில இந்திய தொழிற்தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகள், புயல் காரணமாக டிசம்பா் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நவம்பா் 25 ஆம் தேதி நடைபெறவிருந்த நான்காம் பருவமுறை வரைபடத் தோ்வு டிசம்பா் 3 ஆம் தேதி நடைபெறும். மேற்கண்ட நாள்களில் தோ்வு எழுதவிருந்த பயிற்சியாளா்கள் திருத்திய தோ்வுக்கால அட்டவணைப்படி தோ்வு எழுத வேண்டும்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 2642041, 89408 37678, 86674 08507 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com