விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
By DIN | Published On : 25th November 2020 07:06 AM | Last Updated : 25th November 2020 07:06 AM | அ+அ அ- |

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் டிரோன் கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில் எடுத்துச் செல்லவும், பீடி, சிகரெட் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருள்களை எடுத்துச் சென்று ஆங்காங்கே போடக்கூடாது. வன உயிரினங்களுக்கு திண்பன்டங்களை கொடுப்பதும், ஆழியாறு முதல் வால்பாறை வரை செல்லும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதும், பொழுதுபோக்குவதும் சட்டப்படி தண்டனைக்குரியது. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய அனுமதி கிடையாது ஆகிய வாசகங்கள் இந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...