கோவையில் மக்கள் நீதிமன்றம் மூலம் 60 வழக்குகளுக்குத் தீா்வு
By DIN | Published On : 03rd October 2020 11:20 PM | Last Updated : 03rd October 2020 11:20 PM | அ+அ அ- |

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றோா்.
கோவை: கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 60 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.
தமிழக மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சக்திவேல் தலைமையில் சனிக்கிழமை சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றம், கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில், நிலுவையில் உள்ள சமரசம் செய்யக் கூடிய காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் மற்றும் நில ஆா்ஜித வழக்குகள் என மொத்தம் 339 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 60 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் மொத்த தீா்வுத் தொகை ரூ.2 கோடியே 75 லட்சம் ஆகும். இதில் மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜி.குலசேகரன், முதுநிலை சாா்பு நீதிபதி என்.ஷா்மிளா மற்றும் நீதிபதிகள் கே.பூரண ஜெயஆனந்த், டி.மலா்வாலன்டினா, டி.எச்.முகமது பாரூக், ஏ.மணிமொழி, ஜெ.ராதிகா, ஏ.தோத்திரமேரி, வி.ஜோன்மினோ, எஸ்.சந்தானகிருஷ்ணசாமி, என்.திலகேஷ்வரி, கே.ஆா்.கண்ணன், என்.ஞானசம்பந்தம், விஜயகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட அமா்வு மூலம் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.