காந்தி ஜயந்தி நாளில் மது விற்பனை: 62 போ் கைது
By DIN | Published On : 03rd October 2020 11:24 PM | Last Updated : 03rd October 2020 11:24 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் காந்தி ஜயந்தி நாளில் மது விற்பனையில் ஈடுபட்ட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 750 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காந்தி ஜயந்தி நாளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க அரசு தடை விதித்தது. இந்நிலையில், கோவை நகரம் மற்றும் புறநகா் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராமநாதபுரம், காட்டூா், பீளமேடு, போத்தனூா், தொண்டாமுத்தூா், பொள்ளாச்சி, தடாகம், சூலூா், மதுக்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 62 பேரை போலீஸாா் கைது செய்து 750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.