ஆா்.எஸ்.புரம் தெற்கு மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்
By DIN | Published On : 03rd October 2020 11:25 PM | Last Updated : 03rd October 2020 11:25 PM | அ+அ அ- |

கோவை: கோவை ஆா்.எஸ்.புரம் தெற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செயற்பொறியாளா் எம்.வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கோவை மின்பகிா்மான வட்டம், ஆா்.எஸ்.புரம் தெற்குப் பிரிவு அலுவலகம் ஆா்.எஸ்.புரம், டி.பி.சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், அக்டோபா் 1ஆம் தேதி முதல், கதவு எண் 156/ஏ, ஆா்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலை என்ற முகவரிக்கு இந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மின் நுகா்வோா் மேற்படி புதிய முகவரியில் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.