வால்பாறை அரசுக் கல்லூரியில் அக்டோபா் 15 வரை மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 03rd October 2020 11:19 PM | Last Updated : 03rd October 2020 11:19 PM | அ+அ அ- |

வால்பாறை: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயா்கல்வி மற்றும் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியைப் பெற வசதியாக அரசுக் கல்லூரி மாணவா் சோ்க்கையை அக்டோபா் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வால்பாறை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்லூரியை அணுகி சோ்க்கையை உறுதி செய்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.