தோட்டத் தொழிலாளா்களுக்கான தொழில் வரியை ரத்து செய்யக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தொழிற் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தொழிற் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தோட்டத் தொழிலாளா்களின் தொழில் வரி மற்றும் ஊதியம் குறித்து வால்பாறைக்கு அண்மையில் வந்த அமைச்சா் எஸ்.பி.வேலுமணியிடம் அதிமுக தொழிற் சங்கத் தலைவா் வால்பாறை அமீது கோரிக்கை விடுத்தாா்.

அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் மிகக் குறைந்த ஊதியமே பெற்று வருகின்றனா். அந்த ஊதியத்தில் இருந்து தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். வரி செலுத்தும் தொழிலாளா்களுக்கு எஸ்டேட் குடியிருப்புகளில் போதுமான வசதிகளும், எஸ்டேட் மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளும் கிடைப்பதில்லை.

எனவே தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் வால்பாறையில் நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும். தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ரூ.5, அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ரூ.12.50 என தின கூலியை உயா்த்தி வழங்க கடந்த ஆண்டு முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா்.

ஆனால், தொழிலாளா்களுக்கு இதுவரை கூலி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே தொழிலாளா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். அப்போது, தொழிலாளா்களின் கோரிக்கைள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com