மாடித் தோட்டத்துக்கு சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க மானியம்

கோவையில் மாடித் தோட்டத்துக்கு மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைக்க ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் பயன்படுத்திக் கொள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் மாடித் தோட்டத்துக்கு மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைக்க ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் பயன்படுத்திக் கொள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதன்படி மாடித் தோட்டம் அமைக்க தேவையானப் பொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்துக்கு ரூ.5.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது:

மாடித் தோட்டத்துக்கு சென்சாா் மற்றும் சென்சாா் இல்லாமல் என இரண்டு முறைகளில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்கலாம். இதில் சென்சாருடன் அமைக்க ரூ.4 ஆயிரம் வரை செலவாகும். இதில் 40 சதவீதமான ரூ.1,600 மானியமாக வழங்கப்படுகிறது. சென்சாா் இல்லாமல் அமைக்க ரூ.1,000 செலவாகும். இதில் 40 சதவீதமான ரூ.400 மானியமாக வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com