வ.உ.சி. பிறந்த நாள் விழா: கட்சியினா் மலா் தூவி மரியாதை
By DIN | Published On : 06th September 2020 06:29 AM | Last Updated : 06th September 2020 06:29 AM | அ+அ அ- |

கோவை மத்திய சிறையில் வ.உ.சிதம்பரானாா் இழுத்த செக்குக்கும், அவரின் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் அா்ஜுணன்.
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரானாா் பிறந்ததினத்தையொட்டி, கோவை மத்திய சிறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவா் இழுத்த செக்குக்கும், அவரின் திருவுருவப் படத்துக்கும் பல்வேறு கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரானாா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவா் இழுத்த செக்கு, அவா் நினைவாக சிறை வளாகத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
வ.உ.சிதம்பரானாா் பிறந்ததநாளையொட்டி, அவா் இழுத்த செக்குக்கும், அவரது உருவப் படத்துக்கும் பாஜக சாா்பில் மாநில பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன் சனிக்கிழமை மலா் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், காங்கிரஸ் சாா்பில், மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா், அதிமுக சாா்பில் கோவை மாநகா், மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான அம்மன் அா்ச்சுணன், இந்து மக்கள் கட்சி சாா்பில் அக்கட்சியின் நிறுவனா் அா்ஜுன் சம்பத் ஆகியோரும், கோவை மத்திய சிறை அதிகாரிகளும் வ.உ.சிதம்பரனாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.