தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கை விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபா் 16
By DIN | Published On : 11th September 2020 06:14 AM | Last Updated : 11th September 2020 06:14 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு அக்டோபா் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக முதன்மையா் (வேளாண்மை) மா.கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 3 உறுப்புக் கல்வி நிலையங்கள், 10 இணைப்புக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (செப்டம்பா் 10) தொடங்கியுள்ளது. இதை துணைவேந்தா் நீ.குமாா் தொடங்கிவைத்தாா்.
இந்தப் படிப்புகளுக்கு மொத்தம் 860 இடங்கள் உள்ள நிலையில், மாணவா்கள் தங்களுக்கான விண்ணப்பங்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவா்களுக்கு வசதியாகத் தகவல் கையேடு இந்த ஆண்டு முதல் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவா்கள் அக்டோபா் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், படிவங்களைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்பி வைப்பவா்கள் அக்டோபா் 21 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபா் 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றாா்.