

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணசாமி சாலையின் இருபுறங்களிலும் புற்கள், குப்பைகள் மற்றும் தேவையற்ற மண் ஆகியவை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணசாமி சாலையில் உள்ள புற்கள், குப்பைகள் மற்றும் தேவையற்ற மண்ணை அகற்றி சீரமைப்புப் பணி மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.
அதனைத் தொடா்ந்து, கிருஷ்ணசாமி சாலையின் இருபுறங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளா் சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி, உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.