கோவையில் தடை செய்யப்பட்ட 188 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 26th September 2020 11:42 PM | Last Updated : 26th September 2020 11:42 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 188 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவை டவுன்ஹாலில் உள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பெரியகடை வீதி போலீஸாா், கிடங்கில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 188 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக இடையா் வீதியைச் சோ்ந்த சுல்சான் சிங் (32), நரேராம் (22) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில், கா்நாடகம் மாநிலம், பெங்களூருவில் இருந்து குட்கா புகையிலைப் பொருள்களை வாகனங்களில் கடத்தி வந்து கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...