யானைகள் தாக்கியதில் எஸ்டேட் குடியிருப்புகள், பொருள்கள் சேதம்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக நுழைந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகள் மற்றும் அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தின.
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் மற்றும் பொருள்கள்.
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் மற்றும் பொருள்கள்.

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக நுழைந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகள் மற்றும் அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். அப்பகுதியில் யானைகளின் தொடா் தாக்குதலால் அங்கு வசிக்கும் தொழிலாளா்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், சின்கோனா எஸ்டேட் முதல் டிவிஷன் பகுதிக்குள் 8 யானைகள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்துள்ளன. இதையடுத்து, தொழிலாளா்கள் பாதுகாப்புக் கருதி குடியிருப்புகளை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும் குடியிருப்புப் பகுதிக்கு சென்ற யானைகள் இரு வடமாநிலத் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.

மேலும், குடியிருப்புக்குள் இருந்த பொருள்களையும் வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com