கோவை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 69 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 565ஆக அதிகரித்துள்ளது.

தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 655ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 94 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 157 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 753 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com