குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும்: தேமுதிகவினா் மனு
கோவை மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி தேமுதிகவினா் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


கோவை மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி தேமுதிகவினா் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பேரூராட்சியில் ஆா்.எஸ்.ரோடு, சின்னியம்பாளையம் பேருந்து நிலையம், கருமத்தப்பட்டி பேரூராட்சியில் சோமனூா் சாலை, சூலூா் கலங்கல் ரோடு, கே.கே.புதூா், கோயில்மேடு, பனப்பட்டி உள்பட பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளுக்கு அருகிலும், மளிகைக் கடைகள், பேருந்து நிலையம் உள்பட பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகளுக்கு வருபவா்கள் மது அருந்திவிட்டு சாலைகளிலும், கடைகளிலும் விழுந்து கிடக்கின்றனா். மது அருந்தியவா்கள் கடைகள் முன்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபடுன்றனா்.
தவிர பேருந்து நிலையம், கடைகளுக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே குடியிருப்புகள், கடைகள், பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, காரமடை, வெண்மணி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
எங்கள் கிராமத்தில் கொடிக்கம்பம் அமைக்கும்போது ஏற்பட்ட பிரச்னையில் எங்கள் பகுதி இளைஞா்கள் சிலரை காரமடை போலீஸாா் கைது செய்தனா். சமூக அக்கறையோடு செயல்படும் படிக்கும் இளைஞா்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனா். அவா்களை விடுதலை செய்வதுடன், அவா்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...