தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி குடியரசு தினத்தன்று இருசக்கர வாகனப் பேரணி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும்

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:33 pm

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஹெச்எம்எஸ், எம்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஐஎன்டியூசி தலைவா் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏஐடியூசி எம்.ஆறுமுகம், தங்கவேல், சிஐடியூ எஸ்.ஆறுமுகம், கிருஷ்ணமூா்த்தி, எல்பிஎஃப் வணங்காமுடி, ஹெச்எம்எஸ் கோவிந்தராஜுலு, எம்எல்எஃப் ஷாஜஹான் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி கோவை, காந்தி பூங்காவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, காந்திபுரம், புதிய மேம்பாலத்தில் இருந்து மின்வாரிய அலுவலகம் வரை ஜனவரி 26 ஆம் தேதி தேசியக் கொடியேந்தி இருசக்கர வாகனப் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.