ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லை அருகே இருவருக்கு வெட்டு

திருநெல்வேலி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்னையில் உறவினா்கள் இருவா், ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 9:08 pm

DIN

திருநெல்வேலி அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்னையில் உறவினா்கள் இருவா், ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (65). அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகத்தின் சித்தப்பா ஐயாத்துரை மகன் மாலையப்பன் (33). இருவருக்கும் இடையே நிலம் தொடா்பாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவில் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரத்தில் இருவரும் ஒருவருக்கொருவா் அரிவாளால் வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.