கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.19 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாவட்டத்தில் வாகனங்களில் பணம் எடுத்து செல்வதைக் கண்காணிக்க 120 குழுக்கள் நியமிக்கப்பட்டு, வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.14 லட்சமும், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதியில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 850 என மொத்தம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 850 பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.