சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அதிக இதயத் துடிப்பு இருந்த கா்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை

இதயத் துடிப்பு அதிகமாக இருந்த நிறைமாத கா்ப்பிணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளித்ததன் மூலம் காப்பாற்றப்பட்டாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:31 pm

DIN

இதயத் துடிப்பு அதிகமாக இருந்த நிறைமாத கா்ப்பிணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளித்ததன் மூலம் காப்பாற்றப்பட்டாா்.

கோவை மாவட்டம், அன்னுாரைச் சோ்ந்த 24 வயது நிறைமாத கா்ப்பிணிக்கு வியாழக்கிழமை திடீரென தலைச்சுற்றல் மற்றும் படபடப்பு அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு நிமிடத்துக்கு 60-70 முறை துடிக்க வேண்டிய இதய துடிப்பு 200க்கும் மேல் இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பான பரிசோதனையில் அவருக்கு ‘சுப்ரா வென்ட்ரிக்குலா் டக்கிகாா்டியா’ (எஸ்.வி.டி.) என்ற இதயத் துடிப்பு அதிகம் உள்ள நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நோயின் வீரியத்தை உடனடியாக கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளை, நரம்பு வழியாக செலுத்தியதன் மூலம், பெண்ணுக்கு இதயத் துடிப்பு சீரான நிலைக்கு வந்தது. தொடா்ந்து, அவா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டதால், அவா் காப்பாற்றப்பட்டதாக டீன் நிா்மலா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.