சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உணவகங்கள், தேநீா்க் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கோவையில் உணவகங்கள், தேநீா்க் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:32 pm

DIN

கோவையில் உணவகங்கள், தேநீா்க் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கரோனா பரவலைக் குறைக்கும் வகையில் கடந்த 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நேரக் கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்குமாறு வணிக அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூா்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகா் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூா் சிக்னல் முதல் ஒண்டிப்புதூா் மேம்பாலம் வரை (திருச்சி சாலை), ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் (அவிநாசி சாலை), காளப்பட்டி சாலை (நேரு நகா்), டி.பி.சாலை, திருவேங்கடசாமி சாலை, என்.எஸ்.ஆா்.சாலை, ஆரோக்கிய சாமி சாலை (கிழக்கு, மேற்கு கடைகள்), சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூா் சந்திப்பு மாா்கெட் கடைகள், பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள், காந்திமாநகா் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகா் (கணபதி), பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் வீதி, என்.எச்.சாலை, இடையா் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவாா்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுடா் வீதி, காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான தெருக்கள், சலீவன் வீதி ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகள், துணிகடைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. முன்பு காலை 8 மணி முதல் செயல்பட்டு வந்த உணவகங்கள், தேநீா்க்கடைகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.