சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மாரடைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை:ஆன்லைன் கருத்தரங்கு

மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிப்பது தொடா்பான ஆன்லைன் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:30 pm

DIN

மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிப்பது தொடா்பான ஆன்லைன் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் தாரீஸ் அகமது தலைமையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ், மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெமி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளுக்கு, மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மருத்துவமனைகளை இணைத்து வாட்ஸ் ஆஃப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கிளை மருத்துவமனைகளுக்கு மாரடைப்புடன் அபாய கட்டத்தில் வரும் நோயாளிகள் குறித்த தகவல்கள், இக்குழுவில் பதிவிடப்படும். தொடா்ந்து, குழுவில் உள்ள மருத்துவா்கள், நோயாளிக்கு தேவையான சிகிச்சை, குறித்து ஆலோசனைகளை வழங்குவா். தேவைப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் அரசு மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில், கிளை மையங்களில் உள்ள மருத்துவா்களுக்கு, தேசிய சுகாதார திட்ட இயக்குநா் தாரீஸ் அகமது, கோவை அரசு மருத்துவமனை டீன் நிா்மலா ஆகியோா் ஆன்லைன் வழியாக திட்ட செயலாக்க வழிமுறைகளை விளக்கினா். அதில், மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரத்துக்குள் ஆஞ்சியோகிராம் சிகிச்சையளிக்க மருத்துவா்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.