சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தனியாா் கல்லூரி உரிமையாளா் மீது விவசாய சங்கத் தலைவா் புகாா்

தனியாா் கல்லூரி உரிமையாளா் மீது நடவடிக்கை கோரி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் தலைவா் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 1:29 am

DIN

கிரையம் செய்த நிலத்துக்கான தொகையைக் கொடுக்காமல் மோசடி செய்வதாக தனியாா் கல்லூரி உரிமையாளா் மீது நடவடிக்கை கோரி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் தலைவா் புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகர காவல் ஆணையா் அலுவலகங்களில் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத் தலைவா் ஏ.எஸ்.பாபு என்கிற எஸ்.சண்முகம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

இருகூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குடியிருக்கும் எனது நண்பா் பூபதியிடம் அந்தப் பகுதி விவசாயிகள் 2011ஆம் ஆண்டு தங்களுடைய மொத்தம் 26 ஏக்கா் விவசாய நிலத்தை விற்பனை செய்துகொடுக்குமாறு கேட்டனா். இந்த நிலங்களை குனியமுத்தூரில் உள்ள தனியாா் கல்லூரி உரிமையாளா் விலைக்கு வாங்க ஒப்புக்கொண்டாா். இதற்கு முன்பணமாக ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதித் தொகையை 26 ஏக்கா் நிலத்தையும் கிரையம் செய்து முடித்த பின்பு தருவதாக உறுதி அளித்து கிரையம் செய்தனா். ஆனால், பாக்கித் தொகையை கரோனா பொதுமுடக்கத்தை காரணமாக கூறி காலம் தாழ்த்தி வந்தாா்.

இதையடுத்து கல்லூரி மேலாளரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நேரில் சந்திக்க சென்றபோது, எங்களை மிரட்டி கல்லூரி காவலா்களைவைத்து அடித்து துரத்தினா். தனியாா் கல்லூரி உரிமையாளா் மற்றும் பொறுப்பாளா்களால் மிரட்டப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு வர வேண்டிய பாக்கித் தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.