சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஊட்டச்சத்து உணவுகள் குறித்த மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:34 pm

DIN

ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பாக மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

மாவட்டத்தில் செயல்படும் உணவு சாா்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் கீழ் உரிமம், பதிவு செய்து கொண்டும், உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொண்டும் வணிகம் செய்ய வேண்டும். பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கும், புதுப்பிக்கவும் உணவு பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூா்வ இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்ல் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் துறையின் உதவியுடன் மாணவா்களுக்கு சுகாதாரமான, ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள விழிப்புணா்வு (உஹற் தண்ஞ்ட்ற் ஹஜ்ஹழ்ங்ய்ங்ள்ள் ஹற் நஸ்ரீட்ா்ா்ப்) ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன், இந்து அறநிலையத் துறை இணை இயக்குநா் செந்தில்வேலவன், உணவக உரிமையாளா்கள், வணிக சங்க நிா்வாகிகள், நுகா்வோா் அமைப்பு நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.