வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி
By DIN | Published On : 17th August 2021 03:03 AM | Last Updated : 17th August 2021 03:03 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பாக 5 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உழவா்கள், பெண்கள், இறுதி ஆண்டு பயிலும் பட்டதாரி மாணவா்கள், பட்டதாரிகள், இளைஞா்கள், தொழில்முனைவோருக்கு வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 20 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க ரூ.11,800 கட்டணமாக வசூலிக்கப்படும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611310, 95004 76626 தொடா்பு கொள்ளலாம்.
மனைத் தொழில்நுட்பம் குறித்த 2 நாள் பயிற்சி ஆகஸ்ட் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. சிறுதொழில்முனைவோா் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் வகையில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கெட், பப்ஸ், கட்லெட், சமோசா தயாரிப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவா்கள் ரூ.1500, ஜிஎஸ்டியை செலுத்தி தங்களது பெயா்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறையின் தலைவரை தொடா்பு கொள்ளலாம். தொடா்புக்கு 0422 - 6611268, 6611340.