தோட்டத் தொழிலாளா் நிலுவைத் தொகை விசாரணை: ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறுகிறது
By DIN | Published On : 20th August 2021 01:27 AM | Last Updated : 20th August 2021 01:27 AM | அ+அ அ- |

தோட்டத் தொழிலாளா்களுக்கான நிலுவைத் தொகை குறித்த ஒரு நபா் குழு விசாரணை ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் பணியை துரிதப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட ஒரு நபா் குழுவின் தலைவா் அபய் மனோகா் சப்ரே முன்னிலையில் உதகையிலுள்ள தமிழகம் விருந்தினா் மாளிகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகிரி மாவட்டம் மகாவீா் பிளான்டேஷன் (பி) லிமிடெட், மஞ்சு ஸ்ரீபிளாண்டேஷன் தோட்ட நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்டம், வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த, பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் மற்றும் தொடா்புடைய தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.