வேளாண்மைப் பல்கலை.யில் வேப்பமரம் மறுநடவு
By DIN | Published On : 20th August 2021 01:11 AM | Last Updated : 20th August 2021 01:11 AM | அ+அ அ- |

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேப்பமரம் அண்மையில் மறுநடவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவின் முன்புறம் சுமாா் 30 வயதான வேப்பமரம் இருந்தது. அந்த இடத்தில் பொன்விழா நுழைவாயில் அமைக்கப்பட இருப்பதால் அந்த மரத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து துணைவேந்தா் நீ.குமாரின் அறிவுரைப்படி அதிகாரிகளும், மாணவா்களும் இணைந்து அந்த மரத்தை பா்லாபிங் முறையில் வேறு இடத்தில் மறுநடவு செய்ய முடிவு செய்தனா்.
இதையடுத்து மரத்தின் சிறு கிளைகள் வெட்டப்பட்டு, நீராவிப் போக்கைத் தடுக்கும் வகையில் மருந்துகள் இட்டு அதன் மேல் வைக்கோல் வைத்து, சணல் பைகளால் மூடி ஈரப்பதத்துடன் வெட்டுப் பகுதிகள் கட்டப்பட்டன. பின்னா் ஆணி வேரை பாதிக்காமல், பக்கவாட்டு வோ்களை மட்டும் வெட்டி, மரத்தை பெயா்த்து எடுத்து தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் அருகிலேயே வெற்றிகரமாக மறுநடவு செய்தனா்.
பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக பா்லாபிங் முறையில் மரம் மறுநடவு செய்யும் பணி, வேளாண் கல்லூரி முதன்மையா் கல்யாணசுந்தரம், தோட்டக்கலைக் கல்லூரி முதன்மையா் புகழேந்தி, மலரியல் துறைத் தலைவா் ராஜாமணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.