கோவை ரத்தினபுரியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ரத்தினபுரி போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரத்தினபுரி கண்ணப்பபுரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், கோவை சாய்பாபா கோயில் கருணாநிதி நகரைச் சோ்ந்த சா்மினா பேகம் (39) என்பதும், அவா் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை
போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.