ராணுவ வீரா்கள் உயிரிழப்பு: வால்பாறையில் கடைகளை அடைத்து அஞ்சலி
By DIN | Published On : 11th December 2021 12:22 AM | Last Updated : 11th December 2021 12:22 AM | அ+அ அ- |

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வால்பாறையில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதன்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 போ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதியின் உருவப் படம் வைத்து மலா் தூவி வழக்குரைஞா்கள் அஞ்சலி செலுத்தினா்.
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் ஜெபராஜ் தலைமையில் காந்தி சிலை முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் நகா் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதேபோல வால்பாறை கால்பந்து சங்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவா் பிரமேஸ், ஒருங்கிணைப்பாளா் செய்யது அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.