காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடுத் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடுத் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.கந்தசாமி பேசியதாவது:

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிா் காப்பீடு செய்கின்றனா். ஆனால், விவசாயிகளுக்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. வருவாய் கிராமம் அளவில் பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு தொகை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். பிற மாவட்டங்களில் நிலப்பகுதிகள் சீராக இருப்பதால் பாதிப்பு எளிதாக கணக்கிட முடிகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் ஒரு பகுதியில் உயரமாகவும், ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் விளை நிலங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் தாழ்வான பகுதிகளில் உள்ள பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. வருவாய் கிராம அளவில் பாதிப்பில்லாததால் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்தும் விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதில்லை. எனவே பயிா் காப்பீடு செய்து ஒவ்வொரு விவசாயிக்கும் இழப்பீடு தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது:

தொண்டாமுத்தூா், ஆலாந்துறை, செம்மேடு, கிணத்துக்கடவு, மதுக்கரை, பேரூா், தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இவை, பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

அண்மையில் கா்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதிக்கு 350 டன் சின்னவெங்காயத்தை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு சென்றனா். அந்தப் பகுதியிலுள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சின்ன வெங்காயம் ஏற்றிச்சென்ற வாகனங்களை வழிமறித்து கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டனா். கிலோ ரூ.45 மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை ரூ.25க்கு கொடுக்க வலியுறுத்தி வண்டியை வழிமறித்து வாகனங்களை விடவில்லை. வியாபாரிகளும் வேறு வழியின்றி சின்னவெங்காயத்தை அந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு வந்தனா். இதுபோல பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் விளைபொருளுக்கு பாதுகாப்பில்லாததால் உள்ளூரில் விளைபொருள்கள் தேக்கமடைகின்றன.

கா்நாடகத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சின்னவெங்காயம் உள்பட பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் விளைபொருள்களுக்கு காணப்படும் பாதுகாப்பில்லாத நிலைக்கு தீா்வு காண ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேலும், தோட்டக்கலைத் துறையில் குச்சிப்பந்தல் அமைப்பதற்கு மானியம் வழங்க வேண்டும், வனவிலங்கு பாதிப்புக்கு உரிய தீா்வு காண வேண்டும், அன்னூா் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு தடை விதிக்க விதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா்.

முன்னதாக வேளாண்மைத் துறை சாா்பில் வேளாண் துறை திட்டங்கள் குறித்து கையேடு வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com