டிராக்டா், டிரெய்லா் இணைப்பு கொக்கி கழன்றதில் இரு தொழிலாளா்கள் படுகாயம்
By DIN | Published On : 06th February 2021 12:27 AM | Last Updated : 06th February 2021 12:27 AM | அ+அ அ- |

வால்பாறையில் தேயிலை மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா், டிரெய்லரின் இணைப்புக் கொக்கி கழன்ால் ஏற்பட்ட விபத்தில் இரு தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.
வால்பாறையை அருகே தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் (சின்கோனா) நிா்வாகத்தின் தேயிலை தொழிற்சாலை எஸ்டேட் பகுதியிலேயே அமைந்துள்ளது.
இந்த தேயிலைத் தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பறிக்கப்பட்ட இலைகள் தொழிற்சாலைக்கு டிராக்டா் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது டிராக்டா், டிரெய்லா் இணைப்புக் கொக்கி கழன்றது. இதனால் இலை மூட்டைகளுடன் டிரெய்லா் சாலையில் சரிவாக தட்டி நின்றது. இந்த விபத்தில் இலை மூட்டைகள் மீது அமா்ந்திருந்த சந்திரன் (53), தங்கராஜ் (34) ஆகிய இரு தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.
இவா்கள், வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...