பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 25இல் கோவை வருகை
By DIN | Published On : 14th February 2021 11:53 PM | Last Updated : 14th February 2021 11:53 PM | அ+அ அ- |

பிரதமா் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி கோவைக்கு வர உள்ளாா்.
பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொடிசியா மைதானம் அல்லது வேறு பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்துக்குப் பின் அவா் அன்றைய தினம் இரவு விமானம் மூலம் தில்லி செல்கிறாா். பிரதமா் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பாக போலீஸாா் ஆலோசித்து வருகின்றனா்.
பொதுக் கூட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பிரதமா் பங்கேற்கும் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாஜக முக்கிய நிா்வாகிகள், தமிழக அமைச்சா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.