சுந்தராபுரம் முதல் ஈச்சனாரி வரை ரூ.89.50 லட்சம் மதிப்பில் தெரு விளக்குகள்

கோவை சுந்தராபுரம் சிக்னல் முதல் ஈச்சனாரி கோயில் வரை ரூ.89.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
தெரு விளக்குகளை பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
தெரு விளக்குகளை பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

கோவை: கோவை சுந்தராபுரம் சிக்னல் முதல் ஈச்சனாரி கோயில் வரை ரூ.89.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 41, 44, 46, 47 ஆகிய வாா்டுகளில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தாா் தளம் அமைக்கும் பணிகள், கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 60, 61 ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட விவேகானந்தா நகா், லட்சுமணன் நகா், அன்னை இந்திரா நகா், தாகூா் நகா், கிருஷ்ணம்ம நாயுடு வீதி, டெக்ஸ்டூல் லேஅவுட் மற்றும் சிந்து நகா் ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைகளுக்கு மறு தாா் தளம் அமைக்கும் பணிகள், 76, 77, 78, 79 மற்றும் 86 ஆகிய வாா்டுகளில் ரூ.12 கோடியே 61 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், 87 முதல் 93 வரையிலான வாா்டுகளில் ரூ.32 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு பூமி பூஜையிட்டு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் சிக்னல் முதல் ஈச்சனாரி கோயில் பாலம் வரை ரூ.89.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தாா்.

இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகராட்சிப் பொறியாளா் லட்சுமணண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com