அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்ததனியாா் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 20th February 2021 10:52 PM | Last Updated : 20th February 2021 10:52 PM | அ+அ அ- |

கோவை: அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்காக தனியாா் தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பின் கீழ் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 32 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ரூ.2.50 கோடி நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
தேனி, திருப்பூா் மற்றும் திருக்குவளை ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவன பிரதிநிகளுக்கு மாற்றாக புதிய நிறுவனங்களைத் தோ்வு செய்ய விருப்பமுள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து விருப்ப வெளிப்பாடுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே கோவை மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்த விண்ணப்பம் அளிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ங்ய்க்ங்ழ்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெறலாம். சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422-22501082, 044-22500099, 044-22500199 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.