திமுக பிரசார செயலி அறிமுகம்
By DIN | Published On : 27th February 2021 06:11 AM | Last Updated : 27th February 2021 06:11 AM | அ+அ அ- |

கோவையில் திமுக பிரசார செயலியை நா.காா்த்திக் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.
கோவை, காந்திபுரத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பிரசார செயலியை கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுக பிரசார செயலி வெளியிடப்பட்டுள்ளது. இதை பொது மக்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை செல்லிடப்பேசியில் ரிங்டோன், காலா் டோனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், இதுவரை 140 தொகுதிகளுக்கு சென்று 20 லட்சம் பேரை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டுள்ளாா்.
கோவையில் நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் 20 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அவை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் மெட்டல் மணி, செல்வராஜ், கோட்டை அப்பாஸ் உள்ளிட்டோா் உடனிருந்னா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...