கோவை விழா: தூய்மைப் பணியாளா்கள் ஹெலிகாப்டா் பயணம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக 100 தூய்மைப் பணியாளா்கள் இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா்.
ஹெலிகாப்டா் பயணம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்கள்.
ஹெலிகாப்டா் பயணம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்கள்.

கோவை விழாவின் ஒரு பகுதியாக 100 தூய்மைப் பணியாளா்கள் இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

13ஆவது கோவை விழா சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை மகிழ்விக்கும் விதமாக இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

என்ஜிஜிஓ காலனியில் உள்ள காந்தி செவிலியா் கல்லூரி வளாகத்தில் இருந்து மருதமலை, ஈஷா ஆகிய இடங்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனா். தொடா்ந்து ஜனவரி 10ஆம் தேதி வரையில் தூய்மைப் பணியாளா்கள் இலவசமாக ஹெலிகாப்டா் பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

பொது மக்களும் தள்ளுபடி கட்டணத்தில் ஹெலிகாப்டா் மூலம் கோவையை சுற்றிப் பாா்க்கலாம் என்று கோவை விழா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமை மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளன. இதற்கு கோவை விழா இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு மாரத்தான் போட்டிகளுக்கான செயலியில் போட்டிகளில் பங்கேற்ற ஆதாரங்களைப் புகைப்படங்களாக அனுப்பினால் இ-சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com