காட்டெருமைகள் நடமாட்டம்:வாகனங்களை மெதுவாக இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 30th January 2021 10:47 PM | Last Updated : 30th January 2021 10:47 PM | அ+அ அ- |

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் சாலைகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை மெதுவாக இயக்க வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் குறிப்பாக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் காட்டெருமைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் காட்டெருமைகள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதனையடுத்து, பாரளை எஸ்டேட் சாலைகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் வாகனங்களை மெதுவாக இயக்க வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.