குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 30th January 2021 10:49 PM | Last Updated : 30th January 2021 10:49 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை, காந்தி மாநகரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்கள் (ஒருவா் பெண்) காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துநா் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதற்குத் தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய சான்றிதழ்களுடன் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் கண்காணிப்பாளா், அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம், காந்தி மாநகா், பீளமேடு (அஞ்சல்), கோவை -641 004 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியான நபா்கள் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநா்களுக்கு வருகையின் அடிப்படையில் சேவை வழங்க நாளொன்றுக்கு போக்குவரத்து செலவு உள்பட மதிப்பூதியம் ரூ.1,000 வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளரை நேரடியாகவும், 90950 05163 என்ற செல்லிடப்பேசி எண் மூலமும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.