காா்களின் கண்ணாடி உடைப்பு
By DIN | Published On : 07th July 2021 06:47 AM | Last Updated : 07th July 2021 06:47 AM | அ+அ அ- |

காா் கண்ணாடிகளை அரிவாளால் உடைத்த நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, காந்திபுரம் 5ஆவது வீதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா் சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறாா். இவா் வெளியே சென்றுவிட்டு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். இந்நிலையில் அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் நள்ளிரவில் அவருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதேபோல அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவரின் காா் கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் இருவரும் புகாா் அளித்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
அதில், இருசக்கர வாகனங்களில் வந்த 2 இளைஞா்கள் அரிவாளால் இரு காா்களின் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. இதன்பேரில் போலீஸாா் சம்பந்தப்பட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...