குற்றச்செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை
By DIN | Published On : 07th July 2021 06:45 AM | Last Updated : 07th July 2021 06:45 AM | அ+அ அ- |

மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
கோவையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்தும் ,17 நபா்கள் மீது நன்னடத்தை பிணையம் பெற்றும், 13 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தும் மாவட்ட காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபா்கள் மீது தொடா்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் பற்றிய தகவலை 77081-00100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியங்கள் காக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...