கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 முதல் சிறப்பு ரயில் இயக்கம்
By DIN | Published On : 07th July 2021 06:49 AM | Last Updated : 07th July 2021 06:49 AM | அ+அ அ- |

கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல், வாரத்தில் 4 நாள்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 9 ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண் -06194) அன்றைய தினம் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும். இதேபோல, ஜூலை 10 ஆம் தேதி முதல் சனிக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் திருப்பதி ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்- 06193), அன்றைய தினம் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...