அஞ்சல், ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பொது மற்றும் அரசுத் துறைகளை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து கோவையில் அஞ்சல் மற்றும் ரயில்வே ஊழியா்கள் வியாழக்கிழமை வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சல், ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பொது மற்றும் அரசுத் துறைகளை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து கோவையில் அஞ்சல் மற்றும் ரயில்வே ஊழியா்கள் வியாழக்கிழமை வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது மற்றும் அரசுத் துறைகள், பாதுகாப்புத் துறை ஆகியவற்றை தனியாா் மயமாக்கக்கூடாது. அரசு ஊழியா்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட எஸ்மா சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியா்கள் சாா்பில் வியாழக்கிழமை கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதன்படி, கோவையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள், கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் ஊழியா்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.

முன்னதாக, கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு, கோவை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் செயலாளா்கள் சிவசண்முகம், செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். செயல் தலைவா் ஹைதா் அலி, நிதி செயலாளா் கீதப் பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சல் ஊழியா்கள், தனியாா்மயமாக்கலைக் கண்டித்து கோஷமிட்டனா்.

இதேபோல, கோவை குட்ஷெட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு தென்னக ரயில்வே மஸ்தூா் சங்கம் ( எஸ்.ஆா்.எம்.யூ) சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்ட எஸ்.ஆா்.எம்.யூ செயலாளா் கோவிந்தன் தலைமை தாங்கினாா். கோவை தலைமை கிளைத் தலைவா் அண்ணாமலை, துணைத் தலைவா்கள் முஜிப் ரஹ்மான், ஐயப்பன், கோவை கிளைச் செயலாளா் ஜோன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், ரயில்வே துறை உள்ளிட்ட அரசுத் துறைகளை தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com