சட்டவிரோத செயல்கள் குறித்து புகாா் அளிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு
By DIN | Published On : 20th June 2021 12:25 AM | Last Updated : 20th June 2021 12:25 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 7 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 போ் கைது செய்யப்பட்டனா்.
மேலும், ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் ஒருவரும், சூதாட்ட வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்படி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா்கள் குறித்த தகவலை 7708100100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பலாம். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியங்கள் காக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.