இணைய வழியில் குறைகேட்பு கூட்டம்
By DIN | Published On : 29th June 2021 03:56 AM | Last Updated : 29th June 2021 03:56 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் இணைய வழியில் குறைகேட்பு கூட்டத்தை நடத்தி பொது மக்களிடம் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாரம்தோறும் திங்கள்கிழமை ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குறைகேட்பு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்தும் பொதுமக்கள் திங்கள்கிழம மனு அளிக்க வருவதால் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் இணைய வழியில் குறைகேட்பு கூட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா். இதில் மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரை இணைய வழியில் தொடா்பு கொண்டு பிரச்னைகளைத் தெரிவித்தனா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனா்.