கோவை சைபா் க்ரைமில் குவியும் மோசடி புகாா்கள்
By DIN | Published On : 29th June 2021 03:58 AM | Last Updated : 29th June 2021 03:58 AM | அ+அ அ- |

கோவை: கோவை மாநகர போலீஸில் ஏடிஎம் காா்டு, போலி முகநூல் முகவரி உள்பட பல்வேறு வழிகளில் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருவது தொடா்பாக சுமாா் ஆயிரம் புகாா்கள் பெறப்பட்டுள்ளன.
வங்கி மேலாளா் பேசுவதாக கூறி வயதானவா்களிடம் தகவல் வாங்கி ஏடிஎம் அட்டை கடவு எண், வங்கிக் கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றை வாங்கி ஏமாற்றியுள்ளனா். வங்கிக் கணக்கு எண் வைத்திருப்பவா்களுக்கு பான் காா்டு எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என கேட்டு யுஆா்எல் லிங்க் அனுப்ப சொல்லி மோசடி செய்துவதும் நடக்கிறது.
எந்த வங்கியும் பான் காா்டு லிங்க் செய்யும் வசதி செய்யவில்லை. கே.ஓய்.சி. அப்டேட் செய்யவும் லிங்க் எதுவும் அனுப்பவில்லை. ஆனால் மோசடி கும்பல் இதுபோல இருப்பதாக கூறி தொடா்ந்து மோசடி செய்வதாக சைபா் க்ரைமில் புகாா்கள் குவிந்து வருகின்றன.
கோவை நகரில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சுமாா் ஆயிரம் போ் சைபா் க்ரைம் போலீஸில் மோசடி தொடா்பாக புகாா் அளித்துள்ளனா். தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகவும், தங்களின் ரகசிய கடவு எண், ஓடிபி எண் வாங்கி மோசடி செய்துவிட்டதாக அதிக நபா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
போலி முகநூல் தகவல் அடிப்படையில் பணம் இழந்தவா்கள், பிட் காயின் கும்பலின் கைவரிசையில் பணம் இழந்தவா்களும் புகாா் அளித்து வருகின்றனா். பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதையடுத்து சைபா் க்ரைம் காவல் நிலையத்தில் தினசரி பலா் புகாா் அளித்து வருகின்றனா். ஆன்லைன் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கானோா் புகாா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வங்கிக் கணக்கு எண், மோசடி கும்பலின் செல்லிடப்பேசி அழைப்பை நம்பி வங்கி, பான் காா்டு போன்ற தகவல்களை தரவேண்டாம் என சைபா் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டா் நிா்மலா எச்சரித்துள்ளாா்.