சிறுமி கடத்தல்: போக்சோவில் சிறுவன் கைது
By DIN | Published On : 29th June 2021 03:54 AM | Last Updated : 29th June 2021 03:54 AM | அ+அ அ- |

கோவை: சிறுமியைக் கடத்திச் சென்ற சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை, சின்னவேடம்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது தந்தை அளித்தப் புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் அச்சிறுமியை நாகப்பட்டினம், வண்டிக்காரன் காடு பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரியவந்தது.
சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சிறுவன் அவரை உடுமலைப்பேட்டையில் உள்ள ஜல்லிப்பட்டிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அங்கே மறைந்திருந்த இருவரையும் போலீஸாா் மீட்டு கோவை அழைத்து வந்தனா். சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.