போக்குவரத்துக் கழகஊழியா்களுக்கு தடுப்பூசி
By DIN | Published On : 29th June 2021 04:04 AM | Last Updated : 29th June 2021 04:04 AM | அ+அ அ- |

கோவை திருச்சி சாலை, சுங்கம் பணிமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற போக்குவரத்து ஊழியா்கள்.
கோவை: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கும் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. கோவை சுங்கம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கான தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஏ.ஆறுமுகம் தொடங்கிவைத்த இந்த முகாமில், 750 ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.