விதிமுறை மீறல்: தேநீா்க் கடைக்கு ‘சீல்’
By DIN | Published On : 29th June 2021 03:56 AM | Last Updated : 29th June 2021 03:56 AM | அ+அ அ- |

கோவை: கோவையில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட தேநீா்க் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கோவையில் திங்கள்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேநீா்க் கடைகளில் பாா்சல் சேவைகளுக்கும், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை ஆா்.எஸ்.புரத்தில் கரோனா விதிமுறைகளை மீறி அதிக அளவில் வாடிக்கையாளா்களை அனுமதித்திருந்த தேநீா்க் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.